28. மக்கள்பதர்

தன்பெருமை சொல்லியே தன்னைப் புகழ்ந்த பதர்
     சமர்கண்டு ஒளிக்கும்பதர்
  தக்கபெரியோர் புத்தி கேளாதபதர்,தோழர்
     தம்மொடு சலிக்கும் பதர்
பின்புகாணாஇடம் தன்னிலே புறணி,பல
     பேசிக்களிக்கும் பதர்
  பெற்றதாய் தந்தை துயர்பட வாழ்ந்து இருந்தபதர்
     பெண்புத்தி கேட்கும் பதர்
பொன்பணம் இருக்கவே போய்இரக்கின்ற பதர்
     பொய்ச்சாட்சி சொல்லும்பதர்
  புவியோர் நடத்தையை இகழ்ந்தபதர், தன்மனைவி
     புணர்தல்வெளி ஆக்கும்பதர்
மன்புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர்
     மனிதரில் பதர்என்பர்காண்
  மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

உரை