29. தமக்கு உரியவற்றைக் காணாவிடில் துயரப்படுபவை
இரவிகாணா வனசம் மாரிகாணாத
பயிர்
இந்துகாணாத குமுதம்
ஏந்தல்காணாநாடு கரைகள்காணா ஓடம்
இன்சொல்காணா விருந்து
சுரபிகாணாதகன்று அன்னைகாணா மதலை
சோலைகாணாத வண்டு
தோழர்காணா நேயர் கலைகள்காணாத மான்
சோடுகாணாத பேடு
குரவர்காணாத சபை தியாகிகாணாஅறிஞர்
கொழுநர்காணாத பெண்கள்
கொண்டல்காணாத மயில் சிறுவர்காணா வாழ்வு
கோடைகா ணாதகுயில்கள்
வரவுகாணாத செலவு இவைஎலாம் புவிமீதில்
வாழ்வுகாணா இளமையாம்
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|