33. சிறிதும்
பயன் அற்றவர்
பதர் ஆகிலும் கன விபூதிவிளை
விக்கும்
பழைமைபெறு சுவர்ஆகிலும்
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடுமலம்
பன்றிகட்கு உபயோகம்ஆம்
கதம்மிகு கடாஎன்னில் உழுதுபுவிகாக்கும் வன்
கழுதையும் பொதிசுமக்கும்
கல்எனில் தேவர்களும் ஆலயமும் ஆம்பெருங்
கான்புற்று அரவமனைஆம்
இதம்இலாச் சவம்ஆகிலும் சிலர்க்கு உதவிசெய்யும்
இழிவுறு குரங்காயினும்
இரக்கப் பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல்
ஏற்றமாளிகை விளக்கும்
மதம்அது மிகும்பரமலோபரால் உபகாரம்
மற்றுஒருவருக்கும் உண்டோ?
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|