37.
திருத்தினாலும் திருந்தாதவன்
கட்டிஎரு இட்டுச் செழுந்தேனை
வார்க்கினும்
காஞ்சிரம் கைப்புவிடுமோ?
கழுதையைக் கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும்
கதிபெறும் குதிரைஆமோ?
குட்டிஅரவுக்குஅமுது அளித்தே வளர்க்கினும்
கொடுவிடம் அலாதுதருமோ?
குக்கல்நெடு வாலுக்கு மட்டையைக் கட்டினும்
கோணாமலேநிற்குமோ?
ஒட்டியே குறுணிமை இட்டாலும் நயம்இலா
யோனிகண் ஆகிவிடுமோ?
உலவுகன கர்ப்பூர வாடைபல கூட்டினும்
உள்ளியின் குணம்மாறுமோ?
மட்டிகட்கு ஆயிரம் புத்திசொன்னாலும்அதில்
மார்க்கமரியாதை வருமோ?
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|