38. குறிப்பு
அறிதல்
மனத்தில் கடும்பகை
முகத்தினால் அறியலாம்
மாநிலப் பூடுகள்எலாம்
மழையினால் அறியலாம் நல்லார் பொலார்தமை
மக்களால் அறியலாம்
கனம்மருவு சூரரைச் சமரினால் அறியலாம்
கற்றஒரு வித்துவானைக்
கல்விப்ர சங்கத்தினால் அறியலாம்குணங்
களைநடையினால் அறியலாம்
தனதுஅகம் அடுத்தது பளிங்கினால் அறியலாம்
சாதிசொல்லால் அறியலாம்
தருநீதி கேள்வியால் அறியலாம் பிணிகளைத்
தாதுக்களால் அறியலாம்
வனசவிக சிதவதன பரிபூரணானந்த
வாலவடிவான வேலா
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|