41. அற்பருக்கு
வாழ்வுவரில் குணம் வேறுபடும்
அற்பர்க்கு வாழ்வுசற்று
அதிகம் ஆனால்விழிக்கு
யாவர்உருவும் தோற்றிடா
அண்டிநின்றே நல்லவார்த்தைகள் உரைத்தாலும்
அவர்செவிக்கு ஏறிடாது
முன்பட்சம் ஆனபேர் வருகினும் வாரும்என
மொழியவும் வாய்வராது
மோதியே வாதப் பிடிப்புவந்தது போல
முன்காலை அகலவைப்பார்
விற்பனம் மிகுந்தபெரியோர் செய்தி சொன்னாலும்
வெடுவெடுத்து ஏசிநிற்பார்
விருதா மகத்துவப் பேயது சவுக்கடி
விழும்போது தீரும்என்பார்
மல்புயம் தனில்நீப மாலைஅணி லோலனே
மார்பனே வடிவேலவா
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|