44. வலியோரையும்
ஊழ்விடாது
அன்றுமுடி சூடுவது இருக்க,ரகு
ராமன்முன்
அருங்காடு அடைந்ததுஎன்ன
அண்டர்எல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்கு
ஆலம் லபித்ததுஎன்ன?
வென்றிவரு தேவர்சிறை மீட்டநீ களவில்வே
டிச்சியை சேர்ந்ததுஎன்ன?
மேதினி படைக்கும் அயனுக்குஒரு சிரம்போகி
வெஞ்சிறையில் உற்றதுஎன்ன
என்றும்ஒரு பொய்சொலா மன்னவன் விலைபோனது
என்னகாண் வல்லமையினால்
எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன்
எத்தனப் படிமுடியுமாம்
மன்றுதனில் நடனம்இடு கங்காதரன் பெற்ற
வரபுத்ர வடிவேலவா
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|