47. தீயசெயலால்
அழிவு நேரும்
சூரபது மன்பலமும் இராவணன்
தீரமும்
துடுக்கான கஞ்சன்வலியும்
துடியான இரணியன் வரப்ரசாதங்களும்
தொலையாத வாலி திடமும்
பாரமிகு துரியோதன் ஆதி நூற்றுவர் அது
பராக்ரமும் மதுகைடவர்
பாரிப்பும் மாவலிதன் ஆண்மையும் சோமுகன்
பங்கில்உறு வல்லமைகளும்
ஏரணவு கீசகன் கனதையும் திரிபுரரின்
எண்ணமும் தக்கன் எழிலும்
இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவர்அவர்
இடும்பால் அழிந்த அன்றோ?
மாரனைக் கண்ணால் எரித்துஅருள் சிவன்தந்த
வரபுத்ர வடிவேலவா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|