48. நல்லோர்
நட்பு நிலை
மாமதியில் முயலானது
அதுதேயவும் தேய்ந்து
வளரும்அப் போதுவளரும்
வாவிதனில் ஆம்பல்கொட்டிகள் அதனில் நீர்வற்றில்
வற்றிடும் பெருகில்உயரும்
பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்
பொங்குகாலம் தழைக்கும்
புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்
போது உதயம் ஆகில்மலரும்
தேமுடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்அது
தேறில் உயிரும்சிறக்கும்
சேர்ந்தோர்க்கு இடுக்கண்அது வந்தாலும் நல்லோர்
சிநேகம் அப்படிஆகுமே
வாமன சொரூப,மத யானை முகனுக்குஇளைய
வாலகுருபர, வேலவா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|