50. சமயத்துக்கு
உதவாதவை
கல்லாது புத்தகம்தனில்
எழுதி வீட்டினில்
கட்டிவைத்திடு கல்வியும்
காலங்களுக்கு உதவவேண்டும் என்று அன்னியன்
கையில் கொடுத்தபொருளும்
இல்லாளை நீங்கியே பிறர்பாரிசதம் என்று
இருக்கின்ற குடிவாழ்க்கையும்
ஏறுமாறாகவே தேசாந்தரம் போய்
இருக்கின்ற பிள்ளை வாழ்வும்
சொல்ஆனது ஒன்றும்அவர்மனம்ஆனது ஒன்றுமாச்
சொல்லும் வஞ்சகர்நே சமும்
சுகியமாய் உண்டுஎன்று இருப்பது எல்லாம்தருண
துரிதத்தில் உதவாது, காண்
வல்ஆன கொங்கைமடமாது தெய்வானைகுற
வள்ளி பங்காளநேயா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|