53. பலகூடினும்
ஒன்றற்கு ஈடாகாதவை
தாரகைகள் ஒருகோடி
வானத்து இருக்கினும்
சந்திரன்கு ஈடாகுமோ
தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலும்ஒரு
தம்பட்ட ஓசைஆமோ?
கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு
குஞ்சரக் கன்றுஆகுமோ?
கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலும்ஒரு
கோகனகமலர் ஆகுமோ?
பாரமிகு மாமலைகள் பலகூடி னாலும்ஒரு
பைம்பொன்மக மேருஆமோ?
பலன்இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்
பனன் ஒருவனுக்கு நிகரோ?
வாரணக் கொடிஒரு கரத்தில்பிடித்து ஒன்றில்
வடிவேல் அணிந்தமுருகா!
மயில்ஏறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|