63. ஒன்று
இல்லாமையால் சிறக்காதவை
கொங்கை இல்லாதவட்கு
எத்தனைப் பணிஉடைமை
கூடினும் பெண்மைஇல்லை!
கூறுநிறை கல்வி இல்லாமல்எத் தனைகவிதை
கூறினும் புலமைஇல்லை!
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம்
தரிக்கினும் கனதைஇல்லை!
சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்இலாச்
சாதமும் திருத்திஇல்லை!
பங்கயம் இலாமல் எத்தனைமலர்கள் வாவியில்
பாரித்தும் மேன்மைஇல்லை!
பத்தி இல்லாமல்வெகு நியமமாய் அர்ச்சனைகள்
பண்ணினும் பூசைஇல்லை!
மங்கையர் இலாமனைக்கு எத்தனை அருஞ்செல்வம்
வரினும் இல்வாழ்க்கைஇல்லை!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|