64. அளக்க
இயலாதவை
வாரி ஆழத்தையும் புனல்எறியும்
அலைகளையும்
மானிடர்கள் சனனத்தையும்
மன்னவர்கள் நினைவையும் புருடர் யோகங்களையும்
வானின்உயர் நீளத்தையும்
பாரில்எழு மணலையும் பல பிராணிகளையும்
படியாண்ட மன்னவரையும்
பருப்பதத் தின்நிறையும் ஈசுரச் செயலையும்
பனிமாரி பொழி துளியையும்
சீரிய தமிழ்ப்புலவர் வாக்கில்எழு கவியையும்
சித்தர்தமது உள்ளத்தையும்
தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி
தெரிந்து அளவிடக்கூடுமோ
வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
மருகன்என வந்தமுருகா
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|