67. திருவருள்
சிறப்பு
திருமகள் கடாட்சம்
உண்டானால் எவர்க்கும்
சிறப்புண்டு கனதைஉண்டு
சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்
செல்லாத வார்த்தைசெல்லும்;
பொருளொடு துரும்பு மரியாதைஆம் செல்வமோ
புகல்பெருக்கு ஆறுபோல் ஆம்;
புவியின்முன் கண்டு மதியாதபேர் பழகினவர்
போலவே நேசம்ஆவார்;
பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும் அனுதினம்
பேரும்ப்ரதிட்டை உண்டாம்;
பிரியமொடு பகையாளி கூடஉற வாகுவான்
பேச்சினில் பிழைவராது
வரும்என நினைத்தபொருள் கைகூடி வரும்அதிக
வல்லமைகள் மிகவும்உண்டாம்;
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|