68. நட்பு நிலை

கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே
     களித்துஉளம் மலர்ந்ததுஎன்ன
  கார்மேகம் எங்கே? பசுந்தோகை எங்கே?
     கருத்தில்நட்பு ஆனதுஎன்ன
மதியம் எங்கே பெருங் குமுதம் எங்கேமுகம்
     மலர்ந்துமகிழ் கொண்டதுஎன்ன
  வல்இரவு விடிவது எங்கே கோழி எங்கே
     மகிழ்ந்துகூவிடுதல் என்ன
நிதிஅரசர் எங்கேயிருந்தாலும் அவர்களொடு
     நேசம் ஒன்றாய் இருக்கும்
  நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந்தாலும் அவர்
     நிறைபட்சம் மறவார்கள்காண்
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ
     மருவுசோணாட்டு அதிபனே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை