69. காலம் அறிதல்

காகம் பகல்காலம் வென்றிடும் கூகையைக்
    கனகமுடி அரசர்தாமும்
  கருதுசயகாலம் அது கண்டுஅந்த வேளையில்
     காரியம் முடித்துவிடுவார்
மேகமும் பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய
     மேன்மேலும் மாரிபொழியும்
  மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்
     மிடியாளருக்கு உதவுவார்;
நாகரிகம் உறுகுயில் வசந்த காலத்திலே
     நலம்என்று உகந்துகூவும்;
  நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த
     நாளையில் முடிப்பர்கண்டாய்;
வாகனைய காலைகல் மாலைபுல் எனும்உலக
     வாடிக்கை நிசம்அல்லவோ
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு?
     மலைமேவு குமரேசனே!

உரை