70. இடம் அறிதல்
தரைஅதனில் ஓடுதேர்
நீள்கடலில் ஓடுமோ?
சலதிமிசை ஓடுகப்பல்
தரைமீதில் ஓடுமோ? தண்ணீரில் உறுமுதலை
தன்முன்னே கரிநிற்குமோ?
விரைமலர் முடிப்பரமர் வேணிஅரவினை வெல்ல
மிகுகருடனால் ஆகுமோ
வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் அஞ்சாமல்
வேறுஒருவர் செல்லவசமோ
துரைகளைப் பெரியோரை அண்டி வாழ்வோர்தமைத்
துட்டர்பகை என்னசெய்யும்?
துணைகண்டு சேர்இடம் அறிந்துசேர் என்றுஒளவை
சொன்னகதை பொய்அல்லவே?
வரைஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள்
வன்போர் செயித்ததுஅன்றோ?
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|