8. இவர்க்கு
இவர் தெய்வம் எனல்
ஆதுலர்க்கு அன்னம்
கொடுத்தவர்களே தெய்வம்;
அன்பான மாணாக்கருக்கு
அரியகுருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து
அகற்றினோனே தெய்வமாம்;
காதல்உறு கற்புடைய மங்கையர் தமக்குஎலாம்
கணவனே மிக்கதெய்வம்
காசினியில் மன்உயிர் தமக்குஎலாம் குடிமரபு
காக்கும்மன்னவர் தெய்வமாம்
ஓதுஅரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம்
உயர்சாதி மாந்தர்யார்க்கும்
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு
உற்றசிவபக்தர் தெய்வம்
மா தயையினால் சூர் தடிந்துஅருள் புரிந்ததால்
வானவர்க்குத் தெய்வம் நீ
மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|