80. இது
இல்லாதவர்க்கு இது இல்லை!
சார்பு இலாதவருக்கு
நிலைஏது; முதல்இலா
தவருக்கு இலாபம்ஏது;
தயைஇலாதவர் தமக்கு உறவேது; பணமிலா
தார்க்குஏது வேசை உறவு;
ஊர் இலாதவர் தமக்கு அரசுஏது; பசிவேளை
உண்டிடார்க்கு குறுதிநிலைஏது
உண்மை இல்லாதவர்க்கு அறம்ஏது முயல்விலார்க்கு
உறுவதுஒரு செல்வம்ஏது
சோர்விலாதவருக்கு மற்றும்ஒரு பயம்ஏது?
சுகம்இலார்க்கு ஆசைஏது?
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது; இடர்செய்
துட்டருக்கு இரக்கம்ஏது
மார்புஉருவ வாலிமேல் அத்திரம் விடுத்தநெடு
மால்மருகனான முருகா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|