81. இதனினும் இது நன்று

பஞ்சரித்து அருமை அறியார்பொருளை எய்தலின்
     பலர்மனைப் பிச்சைநன்று;
  பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில்
     பட்டினிஇருக்கை நன்று;
தஞ்சம்ஒரு முயலைஅடு வென்றிதனில் யானையொடு
     சமர்செய்து தோற்றல்நன்று;
  சரசகுணம் இல்லாத பெண்களைச் சேர்தலின்
     சன்னியாசித்தல் நன்று;
அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனின்
     அரவினொடு பழகுவது நன்று;
  அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில்
     ஆருயிர் விடுத்தல்நன்று;
வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே
     வருந்திடும் சிறுமைநன்று;
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை