82. நிலையாதவை

கொற்றவர்கள் ராணுவமும்; ஆறுநேர் ஆகிய
     குளங்களும்; வேசைஉறவும்
  குணம்இலார் நேசமும்; பாம்பொடு பழக்கமும்;
     குலவுநீர் விளையாடலும்;
பற்றலார் தமதிடை வருந்து விசுவாசமும்;
     பழையதாயாதிநிணறும்;
  பரதார மாதரது போகமும்; பெருகிவரு
     பாங்கான ஆற்றுவரவும்;
கற்றும்ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேர்உறவும்;
     நல்ல மதயானைநட்பும்;
  நாவில்நல் உறவும் ஒருநாள்போல் இராஇவைகள்;
     நம்பப் படாதுகண்டாய்!
மற்றும்ஒரு துணைஇல்லை நீதுணை எனப்பரவும்
     வானவர்கள் சிறைமீட்டவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை