84. தாழ்தல் பெருமை

வேங்கைகள் பதுங்குதலும், மாமுகில் ஒதுங்குதலும்,
     விரிசிலை குனிந்திடுதலும்,
  மேடம் அது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும்
     வெள்விடைகள் துள்ளிவிழலும்
மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும்
     முனிவர்கள் நயந்துகொளலும்
  முதிர்படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும்
     முதலினர் பயந்திடுதலும்
ஆங்கரவு சாய்குதலும் மகிழ்மலர் உலர்ந்திடலும்
     ஆயர்குழல் சூடுபடலும்
  அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல்
     அதனால் இளைப்புவருமோ?
மாங்கனிக்கா அரனை வலமது புரிந்துவளர்
     மதகரிக்கு இளையமுருகா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை