86. பாடல் இயல்பு

எழுத்துஅசைகள் சீர்தளைகள் அடிதொடைகள் சிதையாது
     இருக்கவே வேண்டும்அப்பா
  ஈர்ஐம் பொருத்தமொடு மதுரமாய்ப் பளபளப்பு
     இனியசொற்கு அமையவேண்டும்
அழுத்தம்மிகு குறளினுக்கு ஒப்பாக வேபொருள்
     அடக்கமும் இருக்கவேண்டும்
  அன்பான பாவினம் இசைந்துவரல் வேண்டும்முன்
     அலங்காரம் உற்றதுறையில்
பழுத்துஉளம் உவந்துஓசை உற்றுவரல் வேண்டும்
     படிக்கும்இசை கூடல்வேண்டும்;
  பாங்காக இன்னவை பொருந்திடச் சொற்கவிதை
     பாடில் சிறப்புஎன்பர்காண்
மழுத்தினம் செங்கைதனில் வைத்த கங்காளன் அருள்
     மைந்தன் என வந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை