87. திருநீறு
வாங்கும் முறை
பரிதனில் இருந்தும்
இயல் சிவிகையில் இருந்தும் உயர்
பலகையில் இருந்தும்மிகவே
பாங்கான அம்பலம் தனிலே இருந்தும்
பருத்த திண்ணையில்இருந்தும்
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
திருநீறு வாங்கிஇடினும்
செங்கைஒன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
திகழ் தம்பலத்தினோடும்
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
அசுத்தநிலம் ஆன அதினும்
அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
அவர்க்குநரகு என்பர்கண்டாய்
வரிவிழி மடந்தை குறவள்ளி நாயகிதனை
மணந்துமகிழ் சகநாதனே!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|