88. திருநீறு
அணியும் முறை
பத்தியொடு சிவசிவா
என்றுதிரு நீற்றைப்
பரிந்துகையால் எடுத்தும்
பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
பருத்தபுயமீதில் ஒழுக
நித்தம் மூவிரல்களால் நெற்றியில் அழுந்தல்உற
நினைவாய்த் தரிப்பவர்க்கு
நீடுவினை அணுகாது தேகபரி சுத்தராய்
நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே
தாண்டவம் செய்யும்திரு
சஞ்சலம் வராதுபர கதிஉதவும் இவரையே
சத்தியும் சிவனும்என்னலாம்
மத்துஇனிய மேருஎன வைத்து அமுதினைக்கடையும்
மால்மருகன் ஆனமுருகா!
மயில்ஏறி விளையாடுகுகனே புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே!
|