9. இவர்க்கு
இதில் நினைவு எனல்
ஞான நெறியாளர்க்கு
மோட்சத்திலே நினைவு
நல்லறிவு உளோர்தமக்கு
நாள்தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு
இராச்சியம் தன்னில்நினைவு
ஆனகாமுகருக்கு மாதர்மேலே நினைவு
அஞ்சாத் திருடருக்குஇங்கு
அனுதினம் களவிலே நினைவு தனவணிகருக்கு
ஆதாயமீது நினைவு
தானமிகு குடியாளருக்கு எலாம் வேளாண்மை
தனில் நினைவு கற்பவர்க்குத்
தகுகல்விமேல் நினைவு வேசியர்க்கு இனியபொருள்
தருவோர்கள் மீது நினைவு
மானபரனுக்கு மரியாதைமேல் நினைவுஎற்கு
மாறாது உன்மீது நினைவு
மயில்ஏறி விளையாடு குகனே! புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|