90. நற்பொருளுடன் தீயபொருள் பிறத்தல்

கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்துஎன்ன?
     குலவும் ஆட்டின்கண் அதர்தான்
  கூடப் பிறந்துஎன்ன தண்ணீரின் உடனே
     கொடும்பாசி உற்றும்என்ன?
மாகர்உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்துஎன்ன
     வல் இரும்பில்துருத்தான்
  வந்தே பிறந்துஎன்ன நெடுமரந்தனில் மொக்குள்
     வளமொடு பிறந்துஎன்னஉண்
பாகமிகு செந்நெலொடு பதர்தான் பிறந்துஎன்ன?
     பன்னும்ஒரு தாய்வயிற்றில்
  பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்துஎன்ன?
     பலன்ஏதும் இல்லை அன்றோ?
மாகனக மேருவைச் சிலைஎன வளைத்தசிவன்
     மைந்தன்என வந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை