முகப்பு |
11-20 வரை
|
|
|
11. இப்படிப்பட்டவர்
இவர்
ஞாயநெறி தவறாமல்
உலகபரி பாலனம்
நடத்துபவனே அரசனாம்
ராசயோசனை தெரிந்து உதியஆகியசெய்தி
நவிலும் அவனே மந்திரி,
நேயமுடனேதன் சரீரத்தை எண்ணாத
நிர்வாகியே சூரனாம்,
நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்துசொலும்
நிபுணகவியே கவிஞனாம்
ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும்
அறியும்முதியோன் வைத்தியன்,
அகம்இன்றி மெய்யுணர்ந்து ஐம்புல ஒழித்துவிட்ட
அவனே மெய்ஞானிஎனலாம்
மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான
வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனே!புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
12. விரைந்து
அடக்கத் தருவன இவை,
அக்கினியை, வாய்முந்து
துர்ச்சனரை, வஞ்சமனை
யாளை வளர்பயிர்கொள் களையை,
அஞ்சா விரோதிகளை, அநியாயம் உடையோரை,
அகிர்த்தியப் பெண்கள் ஆர்ப்பைக்,
கைக்குஇனிய தொழிலாளியைக்,கொண்ட அடிமையைக்
களவுசெய்யும் திருடரைக்,
கருதிய விசாரத்தை, அடக்கம்இல் பலிசையைக்,
கடிதான கோபந்தனை,
மெய்க்குஇனிது அலாப்பிணியை, அவைஉதாசீனத்தை,
வினைமூண்டிடும் சண்டையை,
விடம்ஏறு கோரத்தை அன்றுஅடக்குவது அலால்
மிஞ்சவிடல் ஆகாதுகாண்
மைக்குஇனிய கண்ணி குறவள்ளி தெய்வானையை
மணம்செய்த பேர்அழகனே
மயில்ஏறி விளையாடு குகனே புல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
13. இவர்க்கு
இது துரும்பு எனல்
தாராளமாகக் கொடுக்கும்
தியாகிகள்
தமக்கு நல்பொருள் துரும்பு,
தன்உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி
தளம்எலாம் ஒருதுரும்பு,
பேரான பெரியருக்கு அற்பரது கையினில்
பிரயோசனம் துரும்பு,
பெரிதான மோட்சசிந்தனை உள்ளவர்க்குஎலாம்
பெண்போகம் ஒருதுரும்பு,
தீராத சகலமும் வெறுத்த துறவிக்குவிறல்
சேர்வேந்தன் ஒருதுரும்பு,
செய்யகலை நாமகள் கடாட்சம் உள்ளோர்க்குஎலாம்
செந்தமிழ்க் கவிதுரும்பாம்.
வார்ஆரும் மணிகொள் முலைவள்ளி தெய் வானையை
மணம்புணரும் வடிவேலவா
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
14. இதனை
விளக்குவது இது எனல்
குறையாத காயத்ரி
ஆதி செபமகிமையும்,
கூறு சுருதிப்பெருமையும்,
கோதிலா ஆகம புராணத்தின் வளமையும்,
குலவுயாக ஆதிபலவும்,
முறையாய் நடத்தலால் சகல தீவினைகளையும்
முளரிபோலே தகிப்பார்
முதன்மைபெறு சிலைசெம்பு பிரிதிவிகளில்தெய்வ
மூர்த்தம் உண்டாக்குவிப்பார்
நிறையாக நீதிநெறி வழுவார்கள் ஆகையால்,
நீள்மழை பொழிந்திடுவதும்,
நிலமது செழிப்பதும், அரசர் செங்கோல்புரியும்
நிலையும், மாதவர் செய்தவமும்,
மறையோர்களாலே விளங்கும் இவ்உலகத்தின்
மானிடத் தெய்வம்இவர் காண்
மயில்ஏறி விளையாடு குகனே!புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே!
| |
|
உரை
|
|
|
|
|
15. பிறப்பினால்
மட்டும் நன்மைஇல்லை
சிங்கார வனமதில்
உதிப்பினும் காகம்அது
தீம்சொல்புகல் குயில்ஆகுமோ ?
திரைஎறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி
செம்கஞ்ச மலர்ஆகுமோ?
அம்கானகத்தில் பிறந்தாலும் முயல்ஆனது
ஆனையின் கன்றுஆகுமோ?
ஆண்மைஆகிய நல்ல குடியில் பிறந்தாலும்
அசடர்பெரியோர் ஆவரோ?
சங்குஆடு பால்கடல் பிறந்தாலும் நத்தைதான்
சாலக்கிராமம் ஆமோ?
தடம்மேவு கடல்நீரிலே உப்பு விளையினும்
சாரசர்க்கரை ஆகுமோ?
மங்காத செந்தமிழ்க் குறுமுனிக்கு உபதேசம்
வைத்த மெய்ஞ்ஞானகுருவே
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
16. பலருக்கும்
பயன்படுவன
கொண்டல்பொழி மாரியும்,
உதாரசற்குணம்உடைய
கோவும் ஊருணியின் நீரும்
கூட்டம்இடும் அம்பலத்து உறுதருவின் நீழலும்,
குடியாளர் விவசாயமும்,
கண்டவர்கள் எல்லாம் வரும்பெரும் சந்தியில்
கனிபல பழுத்தமரமும்,
கருணையுடனே வைத்திடும் தண்ணீர்ப் பந்தலும்
காவேரி போல்ஊற்றமும்,
விண்தலத்துஉறைசந்திர ஆதித்த கிரணமும்,
வீசும்மாருத சீதமும்,
விவேகிஎனும் நல்லோர் இடத்தில் உறுசெல்வமும்
வெகுசனர்க்கு உபகாரமாம்,
வண்டுஇமிர் கடப்பமலர் மாலைஅணி செங்களப
மார்பனே வடிவேலவா
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
17. தாம்
அழியினும் தம் குணம் அழியாதவை
தங்கம்ஆனது
தழலில் நின்றுஉருகி மறுகினும்
தன்ஒளி மழுங்கிடாது,
சந்தனக் குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே
தன்மணம் குன்றிடாது,
பொங்கமிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே
பொலிவெண்மை குறைவுஉறாது,
போதவே காய்ந்துநன் பால்குறுகினாலும்
பொருந்துசுவை போய்விடாது,
துங்கமணி சாணையில் தேய்ந்துவிட்டாலும்
துலங்குகுணம் ஒழியாது,பின்
தொன்மைதரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது
தூயநிறை தவறுஆகுமோ
மங்கள கல்யாணி குறமங்கை சுரகுஞ்சரியை
மருவு திண்புயவாசனே
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
18. நரகில்
வீழ்வோர் இன்னவர் எனல்
மன்னரைச் சமரில்விட்டு
ஓடினவர், குருமொழி
மறந்தவர், கொலைப்பாதகர்
மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம்
மருவித் திரிந்தபேர்கள்
அன்னம் கொடுத்தபேருக்குஅழிவை எண்ணினோர்
அரசுஅடக்கிய அமைச்சர்
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர்
அருந்தவர் தமைப்பழித்தோர்
முன் உதவியாய்ச் செய்த நன்றியை மறந்தவர்
முகத்துதி வழக்குஉரைப்போர்
முற்று சிவபத்தரை நடுங்கச் சினந்தவர்கள்
முழுதும் பொய்உரைசொல்லுவோர்
மன்ஒருவர் வைத்தபொருள் அபகரித்தோர் இவர்கள்
மாநரகில் வீழ்வர் அன்றோ?
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
19. உடல்நலத்துக்கு
ஏது ஆனவை.
மாதத்து இரண்டுவிசை
மாதரைப் புல்குவது,
மறுவுஅறு விரோசனம்தான்
வருடத்து இரண்டுவிசை; தைலம் தலைக்குஇடுதல்
வாரத்து இரண்டு விசையாம்
மூதறிவினொடுதனது வயதினுக்கு இளையஒரு
மொய்குழலுடன் சையோகம்
முற்றுதயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
முதிரா வழுக்கைஇளநீர்
சாதத்தில் எவ்வளவு ஆனாலும் புசித்தபின்
தாகம் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல், இவை மேலவர்
சரீரசுகம்ஆம் என்பர்காண்
மாதவகுமாரி சாரங்கத்து, உதித்தகுற
வள்ளிக்கு உகந்த சரசா
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
20. யாருக்கும்
அனுபோகம் விடானும்
தேசுபெறு மேரும் ப்ரதட்சணம்
செய்து மதி
தேகவடு நீங்கவில்லை
திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன்
செறும்பகை ஒழிந்தது இல்லை
ஈசன் கழுத்தில்உறு பாம்பினுக்கு இரைவேறு
இலாமலே வாயுவாகும்
இனியகண் ஆகிவரு பரிதிஆனவனுக்கு
இராகுவோ கனவிரோதி
ஆசிலாப் பெரியோர் இடத்தினில் அடுக்கினும்
அமைத்தபடி அன்றிவருமோ?
அவர்அவர்கள் அனுபோகம் அனுபவித்திடல் வேண்டும்
அல்லால் வெறுப்பதுஎவரை
வாசவனும் உம்பர் அனைவரும் விசயசயஎன்று
வந்துதொழுது ஏத்துசரணா!
மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|