முகப்பு |
21-30 வரை
|
|
|
21.
இது இன்றி இது சிறவாது
குருஇலா வித்தை;கூர்அறிவுஇலா
வாணிபம்
குணமிலா மனைவி ஆசை
குடிநலம் இலாநாடு நீதிஇல்லாஅரசு
குஞ்சரம்இலாத வெம்போர்
திருஇலா மெய்த்திறமை பொறைஇலா மாதவம்
தியானம்இல்லாத நிட்டை
தீபம்இல்லாதமனை சோதரம்இலாதஉடல்
சேகரம்இலாத சென்னி
உருஇலா மெய்வளமை; பசிஇலா உண்டி புகல்
உண்மைஇல்லாத வசனம்
யோசனைஇலா மந்திரி தைரியம் இலாவீரம்
உதவிஇல்லாத நட்பு
மருஇலா வண்ணமலர் பெரியோர் இலாதசபை
வையத்து இருந்துஎன்பயன்
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
22. ஆகாப்பகை
அரசர்பகையும்,தவம்புரி
தபோதனர் பகையும்
அரியகருணீகர் பகையும்
அடுத்துக் கெடுப்போர் கொடும்பகையும் உள்பகையும்
அருள்இலாக் கொலைஞர்பகையும்
விரகுமிகும் ஊரில்உள்ளோருடன் பகையும் மிகு
விகடப்ரசங்கி பகையும்
வெகுசனப் பகையும் மந்திரவாதியின் பகையும்
விழைமருத்துவர்கள் பகையும்
உரமருவு கவிவாணர் பகையும் ஆசான்பகையும்
உறவின்முறையார்கள் பகையும்
உற்றதிரவியம் உளோர் பகையும் மந்திரிபகையும்
ஒருசிறிதும் ஆகாதுகாண்
வரநதியின் மதலைஎன இனியசரவணமிசையில்
வருதருண சிறுகுழவியே
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
23. பேய்
எனப்படுவோர் இவர்
கடன்உதவுவோர் வந்து
கேட்கும்வேளையில் முகம்
கடுகடுக்கின்ற பேயும்
கனம்மருவு பெரியதனம் வந்தவுடன் இறுமாந்து
கண்விழிக்காத பேயும்
அடைவுடன் சத்துருவின் பேச்சை விசுவாசித்து
அகப்பட்டு உழன்ற பேயும்
ஆசைமனையாளுக்கு நேசமாய் உண்மைமொழி
ஆனதை உரைத்த பேயும்
இடர்இலா நல்லோர்கள் பெரியோர்களைச் சற்றும்
எண்ணாது உரைத்தபேயும்
இனியபரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவன்கு
இடுக்கண் செய்திட்டபேயும்
மடமனை இருக்கப் பரத்தையைப் புணர்பேயும்
வசைபெற்ற பேய்கள் அன்றோ ?
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
24. அந்த
அந்த இனத்தில் உயர்ந்தவை
தாருவில் சந்தனம்,
நதியினில் கங்கை,விர
தத்தினில் சோமவாரம்
தகைபெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம்
தலத்தினில் சிதம்பர தலம்
சீர்உலவு ரிஷிகளில் வசிட்டர்,பசுவில் காம
தேனு முனிவரில் நாரதன்
செல்வநவமணிகளில் திகழ்பதுமராகமணி
தேமலரில் அம்போருகம்
பேர்உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு
பெலத்தில் மாருதம்,யானையில்
பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம்
பிரணவம் மந்திரத்தில்
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில்
மாமேரு ஆகும் அன்றோ ?
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
25. அவதவர்க்கு வலிமை
அந்தணர்க்கு உயர்வேதமே
பலம், கொற்றவர்க்கு
அரிய சௌரியமே பலம்
ஆனவணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்கு
ஆயின் ஏர்உழவேபலம்
மந்திரிக்குச் சதுர்உபாயமே பலம் நீதி
மானுக்கு நடுவேபலம்
மாதவர்க்குத் தவசுபலம் மடவியர்க்குநிறை,
மானம்மிகு கற்பேபலம்
தந்திரம் மிகுத்த கனசேவகர் தமக்குஎலாம்
சாமிகாரியமே பலம்
சான்றவர்க்குப் பொறுமையேபலம் புலவோர்
தமக்குநிறை கல்விபலமாம்
வந்தனை செயும்பூசை செய்பவர்க்கு இன்புபலம்
வாலவடிவான வேலா
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
26.
இருந்தும் பயன் படாதவை
தருணத்தில் உதவிசெய்யாத
நட்பாளர்,பின்
தந்துஎன்ன தராமல்என்ன
தராதரம் அறிந்து முறைசெய்யாத மன்னரைச்
சார்ந்துஎன்ன நீங்கில்என்ன
பெருமையுடன் ஆண்மைஇல்லாத ஒரு பிள்ளையைப்
பெற்றுஎன்ன பெறாமல்என்ன
பிரியமாய் உள்அன்பு இலாதவர்கள் நேசம்
பிடித்துஎன்ன விடுக்கில்என்ன
தெருளாக மானம்இல்லாத ஒருசீவனம்
செய்துஎன்ன செயாமல் என்ன
தேகிஎன வருபவர்க்கு ஈயாத செல்வம்
சிறந்துஎன்ன முறிந்தும் என்ன
மருவுஇளமை தன்னில்இல்லாத கன்னிகைபின்பு
வந்துஎன்ன வராமல்என்ன
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
27. பயன்
இல்லாதவை
கடல்நீர் மிகுந்துஎன்ன
ஒதிதான் பருத்துஎன்ன
காட்டுஇலவு மலரில்என்ன
கருவேல் பழுத்துஎன்ன நாய்ப்பால் சுரந்துஎன்ன
கானில்மழை பெய்தும்என்ன
அடர்கழுதை லத்திநிலம் எல்லாம் குவிந்து என்ன
அரியகுணம் இல்லாதபெண்
அழகாய் இருந்துஎன்ன ஆஸ்தான கோழைபல
அரியநூல் ஓதிஎன்ன
திடம்இனிய பூதம்வெகு பொன்காத்து இருந்துஎன்ன
திறல்மிகும் கரடிமயிர்தான்
செறிவாகி நீண்டுஎன்ன வஸ்த்ரபூடணம் எலாம்
சித்திரத்து உற்றும் என்ன
மடம்மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத
வம்பர்வாழ்வுக்கு நிகராம்
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
28. மக்கள்பதர்
தன்பெருமை சொல்லியே
தன்னைப் புகழ்ந்த பதர்
சமர்கண்டு ஒளிக்கும்பதர்
தக்கபெரியோர் புத்தி கேளாதபதர்,தோழர்
தம்மொடு சலிக்கும் பதர்
பின்புகாணாஇடம் தன்னிலே புறணி,பல
பேசிக்களிக்கும் பதர்
பெற்றதாய் தந்தை துயர்பட வாழ்ந்து இருந்தபதர்
பெண்புத்தி கேட்கும் பதர்
பொன்பணம் இருக்கவே போய்இரக்கின்ற பதர்
பொய்ச்சாட்சி சொல்லும்பதர்
புவியோர் நடத்தையை இகழ்ந்தபதர், தன்மனைவி
புணர்தல்வெளி ஆக்கும்பதர்
மன்புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர்
மனிதரில் பதர்என்பர்காண்
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
29. தமக்கு உரியவற்றைக் காணாவிடில் துயரப்படுபவை
இரவிகாணா வனசம் மாரிகாணாத
பயிர்
இந்துகாணாத குமுதம்
ஏந்தல்காணாநாடு கரைகள்காணா ஓடம்
இன்சொல்காணா விருந்து
சுரபிகாணாதகன்று அன்னைகாணா மதலை
சோலைகாணாத வண்டு
தோழர்காணா நேயர் கலைகள்காணாத மான்
சோடுகாணாத பேடு
குரவர்காணாத சபை தியாகிகாணாஅறிஞர்
கொழுநர்காணாத பெண்கள்
கொண்டல்காணாத மயில் சிறுவர்காணா வாழ்வு
கோடைகா ணாதகுயில்கள்
வரவுகாணாத செலவு இவைஎலாம் புவிமீதில்
வாழ்வுகாணா இளமையாம்
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|
|
30. நோய்க்கு
வழிகள்
கல்லினால் மயிரினால்
மீதூண் விரும்பலால்
கருதிய விசாரத்தினால்
கடுவழி நடக்கையால் மலசலம் அடக்கையால்
கனிபழங்கறி உண்ணலால்
நெல்லினால் உமியினால் உண்டபின் மூழ்கலால்
நித்திரைகள் இல்லாமையால்
நீர்பகையினால் பனிக்காற்றின்உடல் நோதலால்
நீடுசருகு இலைஊறலால்
மெல்லிநல்லார்கலவி அதிகம்உள் விரும்பலால்
வீழ்மலம் சிக்குகையினால்
மிகுசுமை எடுத்தலால், இளவெயில் காய்தலால்
மெய்வாட வேலைசெயலால்
வல்இரவிலே தயிர்கள் சாகாதி உண்ணலால்
வன்பிணிக்கு இடம்என்பர்காண்
மயில்ஏறி விளையாடு குகனே புல்வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
| |
|
உரை
|
|
|
|