100

     (க-ரை) முன் பகையாளிகள் பஞ்சாகப் பறக்கும்படி வென்ற
வீரனை நோக்கித் தனது மாலையும் தொண்டை மானென்னுந் தனது
பெயரும் விருதாகக் கொடுக்கப்பெற்றவன் வாழ்கின்றதுங் கொங்கு
மண்டலம் என்பதாம்.

     கீழ்கரைப் பூந்துறை நாட்டின் உபநாடுகளிலொன்றான பருத்திப்
பள்ளி நாட்டில் ஒரு வாலிபன் தொண்டைமான் என்னும் அரசன் சேனையிற்
சேர்ந்து பகைவன்மேற் சென்றான். வெற்றி பெற்றான். அத்தொண்டைமான்
என்னும் அரசன் இவனுக்குத் தன் பெயரையும் மாலையையும் விருதாகக்
கொடுத்தனன். அதனால் இவனுக்குத் தொண்டைமான் என்ற பெயர் வந்தது.
மல்ல சமுத்திரம் ஸ்ரீ சோழீசர் ஆலயத்துக்கு உரியவர்கள் அவர்கள்
சந்ததியார். பின்பு நவாபு இடத்திற் பெரிய அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்.
அவர்களுக்குரிய இடங்களுக்குப் போகும் பொழுது ஒரு வெண்கலத் துடுப்பு
(ஒரு பறை) ஒருவன் இவர்கள் முன்னே அடித்துச் செல்வன். இது நவாபு
கொடுத்தது என்கிறார்கள். தொண்டைமான் என்ற பெயர் வைத்தும்
வருகிறார்கள். கலியுகம் 4735 சிரீமுக வருஷத்தில் விழிய குலத்தவர்களான
இவர்கள் மரபினர், மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை யென்னும்
பிரபந்தங் கேட்டிருக்கிறார்கள்.

     தென் கரை நாட்டில் மூலனூரில் தொண்டைமான் என்னும்
விருதுப் பெயர் கொண்ட கீர்த்திமான் ஒருவர் இருந்ததாகத் தெரிகிறது.
வளர் கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான் என்கிறார்கள்.
சங்க கிரிதுர்க்கத்தில் நவாபுவைப் பார்க்கப் பல நாள் காத்திருந்தனர்.
காணப்பெறவில்லை. அங்குள்ள அரச குமரன் அருமையாக வளர்ந்து
வரும் ஒரு செம்மறிக் கடாவைப் பிடித்து இரண்டு காதையும் அறுத்து
விட்டனன். இவனைப் பிடித்து அரசன் முன் விட்டார்கள். ஐயா, நீடித்த
நாளாகக் காத்திருந்துந் தங்களைக் காணப்பெறவில்லை. இப்படிச்
செய்தாவது கண்டு குறைகளைச் சொல்லலாம் என்று இத் தீங்கு செய்தேன்
என்றனன். இந்தத் தைரியமான யோசனைக்கு வியந்து வளர் கடாவைக்
காதறுத்த பஹதூர் தொண்டைமான் என நவாபு கூப்பிட்டார். இதனால்
இப்பெயர் வந்தது எனப்பல செய்யுட் கூறுகிறார்கள். இம்மூல புருஷனின்
இயற்பெயர் தெரியவில்லை. இவன் சந்ததியார் மூலனூர் வட்டத்தில்
இன்னுமிருக்கிறார்கள்.

                 மும்முடிப் பல்லவராயன்

72.



திரிபுவ னச்சக்கர வர்த்தி வளவன்றன் சிந்தைகொளுஞ்
செருவிற் படையைச் செலுத்திச் சயங்கொ டிறலறிந்து
விருதுப் பெயர்மும் முடிப்பல் லவவடல் வீரனென்றே
வருபட்டம் பெற்றவன் வாழ்சிங்கை யுங்கொங்கு மண்டலமே.