அதியேந்திர
விஷ்ணுக்ரஹம் - நாமக்கல்
80.
|
புதிதாய்
மலையைக் குடைந்துநற் சிற்பப் புலவரைக்கொண்
டிதிகாச மானகதையைச் செதுக்குவித் திம்பர்மகிழ்ந்
ததியேந்த்ர விஷ்ணுக் கிரகமென்றேத்த வமைத்தவனாம்
மதியூகி யான வதிகனும் வாழ்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
சிற்ப சாஸ்திரிகளைக் கொண்டு மலையைக் குடைந்து பழங்
கதைகளான பிரதிமைகளைச் செதுக்கி அதியேந்திர விஷ்ணுக்கிரஹம் என்று
ஆலயத்துக்குப் பெயர் கொடுத்த அதியன் வாழ்வதுங் கொங்கு மண்டலம்
என்பதாம்.
வரலாறு
:- நாமக்கல் மலை இடையில் கீழ்ப்புறம் பாறையைக்
குடைந்து அரங்க நாதனுடைய கோவிலமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு
தூண்களையுடைய மேடை ஒன்று. அதனடிப்பாகம் மூன்றடுக்குகள்,
இரண்டு தூண்களையுடைய கூடம். குகையின் மேற்பாகம் வளைவாக
வந்து நீண்டிருக்கும் ஒரு தாழ்வாரம், தூண்களுக்குச் சரியாய்ச்
சுவரெழுப்பி மூன்று கதவுகள் வைத்திருக்கிறார்கள். நடுக்கதவின்
வழியில்தான் கோவிலுக்குப் போக வேண்டும். மற்ற இரண்டு வழிகளும்
வைகுண்ட ஏகாதசியன்று திறக்கப்படுவன. உயரமான மேடையின் பேரில்
கார்க்கோடகனென்னும் பாம்பைப் பாயலாகக் கொண்டு அரங்கநாத சுவாமி
சயனித்திருக்கிறார். அக்குகையின் மேற்குச் சுவரின் சமீபத்தில் தும்புரு,
நாரதன், பதஞ்சலி, பிரமன், நான்கு கந்தருவர்களைப் போலப் பிரதிமை
செதுக்கப்பட்டிருக்கின்றன. சுவாமியின் பாதத்தின் சமீபத்தில்
மேடையின் வடக்குச் சுவரில் மது, கைடவர் சந்திரன் இவர்களைப்
போலமைக்கப்பட்டுள்ளது. சூரியன் உருவம் சுவாமியின் சிரசுக்குச்
சமீபத்தில் தெற்குச் சுவரிலிருக்கிறது. படுக்கையின்கீழ்
பஞ்சாயுதங்களிருக்கின்றன. (மேடைக்கும் வெளியிரண்டு தூண்களுக்கு
மிடையே) சாம்பவந்தன், மகாபலி, சில கந்தருவர்கள் வாமனாவதாரத்தோடு
திருவிக்கிரமாவதாரமு மிருக்கின்றன. இதற்கு எதிர்த்த வடக்குச் சுவரில்
சிவனும், இடதுபுறம் விஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணனது
பிரதிமையிருக்கிறது. ஏழுமுக்கிய நதிகளும், அவற்றிற்கருகே பால
நரசிம்மனுருவமுமிருக்கிறது.
அதே மலையின்
மேல்புறம் பாதையைக் குடைந்து நரசிம்ம சுவாமி
கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிற்ப வேலைகள் செய்த மூன்று
அறைகளும் முன்னாலிரண்டு தூண்களும் ஒரு தாழ்வார
|