11

     வரலாறு :- கமண்டலத்துளடக்கிக் கொண்டு வந்த காவேரி
ஆறானது, கீழே படிந்து ஓடுமாறு காக்கை வடிவேற்று விநாயகர்
கவிழ்த்தனர். பின்பு பெருகி ஓடுங்காவேரி மீது, முனிவர் சினந்தார்.
பெண் வடிவாகக் காவேரி, முனிவரெதிர் தோன்றி ஐயா, சிவபெருமான்
கட்டளையிட்டவாறு விநாயகர் கவிழ்த்தது தெரிந்தும் என்மீது
சினங்கொள்ளல் தருமமோ எனவே, முனிவர் ஆலயத்துட் புகுந்தார்.
மகுடேசுரர் ஒரு திருவிளையாடலாகப் பாதலத் தழுத்தினார். பிராட்டியார்
திருமணச் சேவை காணாது என்னை அகற்றிவிட்டதுமன்றி, இங்குத்
தரிசிக்கவும் வகையின்றிப் பாதலத்துச் செல்கின்றாரே என்று ஓடிப்பிடித்தார்.
அக் கைப்பிடியளவே சிவலிங்கப் பெருமான் நின்றருளினார். அவ்வண்ணமே
நாளும் மகுடேசுரர் அங்கு விளங்குகின்றார். (இது மேல்கரை அரைய நாடு,
ஈரோடு தாலூகா)

                         (மேற்)

விரிதிரைப் பொன்னி போக வினையமுற் றினமென் றின்னோன்
பரிவுறப் போது கின்றான் பாதலத் தடைது மென்றே
இருநிலத் திழிதல் காணா முனிவர னேங்கி மாழ்கி
பிரிவுறா வகைசெங் கையாற் பிடித்தனன் பிடிக்குள் நின்றான்.

                                (கொடுமுடிப் புராணம்)

திருச்செங்கோடு அர்த்தநாரீச்சுரர்

13.



நெடுவா ரிதிபுடை சூழல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சூழ்கொங்கு மண்டலமே.

     (க-ரை) கடல்சூழ்ந்த இவ்வுலகத்தில் உமாதேவியாரோடு
சிவபெருமான் அர்த்தநாரீசுவரர் என்ன ஒரு வடிவான திருச்செங்கோடு
மேவியது கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- கைலாயத்தில் சிவபெருமானை வணங்குவதற்குப்
பிருங்கி முனி வந்தனர் - பரமசிவந் தவிர மற்றுள்ளன வெல்லாம்
அழிவுள்ளன வாகலின் பார்வதி யாரை வணங்கேன் என நினைந்து
பரமசிவத்தை மாத்திரம் வணங்கிச் சென்றனன். மற்றொருநாள்
சிவபெருமானும் உமாதேவியாரும் ஓர் ஆசனத்தமர்ந்து திருமேனி