86.
|
பாயு
மணைநிற்க வேண்டி மகளைப் பலிகொடுத்துந்
தோயுந் திருப்புக் கொளிக்கோயிற் கற்பணித் தொண்டுமிசை
ஆயும் பொருளந்தை யிம்மூடிச் சோழியாண் டானளியின்
மாயன் வடபரி சாரநா டுங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
நொய்யல்
ஆற்றின் அணை அடிக்கடி உடைந்து போகாது
நிலைத்திருக்கக் கருதித் தான்பெற்ற மகளைப் பலிகொடுத்தும், அவிநாசி
ஈசுரர் கோவிலில் கல்வேலையும் பிற திருத்தொண்டும் செய்த பொருளந்தை
குலத்துவந்த இம்முடிச் சோழியாண்டானது உரிமையான வடபரிசார நாடுங்
கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு
:- வடபரிசார நாட்டுப் பால வேளாளரில் விஜய விக்கிரம
இம்முடிச் சோழியாண்டான் என்பவன் அவிநாசியப்பரின் துவஜஸ்தம்ப
மண்டபம் முதலிய திருப்பணிகள் செய்துள்ளான். இவன் மங்கலத்தருகில்
நொய்யலாற்றில் அணைகட்டினான்; நிற்கவில்லை. உடைந்து உடைந்து
போயிற்று. ஒரு சிறுமி பேரில் சந்நதம் வந்து ஒரு தலைக் கன்னிகையைப்
பலிகொடுத்தால் நிற்கும் என்றது. பல நாளுக்குப் பல உயிர்கள்
பிழைத்தற்கான தருமத்துக்கு ஒரு பெண்ணைப் பலிகொடுப்பது அரிதோ
என்று உறுதி கொண்டு அருமையான தனது கன்னிகையைப் பலிகொடுத்துக்
கட்டினான். அணை நின்றது. மகிழ்வெய்தினான். இவன் சாசனம்
அவிநாசியிலிருக்கிறது. முகுந்தை என்னுங்குரக்குத் தளியிலிருக்கிறது.
.........................................................
ஸ்ரீ விஜயா ..................... வாஹன ...............
வருஷம் ஆயிரத்து நானூற்று இருபத்து ஒன்றுக்கு மேல் .................................
வருஷம் கார்த்திகைமுு கஎஉ ...............................
யிவதியப்பஸ்ரீ .........................
நிவாஸ வது .......................................... லத்து முகுந்தனார் உடையார்
குரக்குத்தளி தம்பினார்க்கு ஸ்ரீமன் மண்டலீ ................ ஸ்ரீ வீரனஞ்சராய
உடையர் சீர்பிரதானன் (தெனைக்) வெவனக் கணாம்பைநாட்டு எம்மன்
காலத்து நஞ்சரை செட்டியார் மகன் ஒன்னக்களச் செட்டியார்நம்
....................................... பண்ணிக் கொடுத்த படியாவது முகுந்தனூர்
நஞ்சராயன்
குளக்கீழ் நிலத்து உடையவர் மானியத்து தொட்டக் கட்டையில்
கொவினபவுளிக்கு மேற்கு குளவாய்க் காலுக்கு கிழக்கு சோழீ .............
முடையார் கோயி
|