119

லுக்கு வடக்கு கோட்டைக்குத் தெற்கு இந்து சது சீமையில் உடையவர் பண்டாரத்துக்கு கிரயம் நாலுபொன் கொடுத்து நாம்கொண்ட நிலம் சலுகை ஒன்றுக்கும் இருநூறு தென்னம்பழம்போட்டு தோட்டம் பண்ணி இந்தத் தோட்டத்தினாலுண்டான ஆதாயமும் உடையவர் அங்கரங்க போகத்துக்கு நடத்தக் கடவதாகவும், இந்த .................ம் வடபரிசார நாட்டுக் கவுண்டர்கள் செவ்வூர் அண்டா மன்றாடி மக்கள் சோழியாண்டான் சூரியதேவன் மசான உள்ளிட்டார் மக்கள் மக்கள் சந்திராதித்தவரை நடத்திவரக் கடவராகவும்......

                    உத்தமச் சோழன்

87.



இத்தரை மீதினிற் சேனா பதியா யிருந்து வெற்றி
யொத்து வரப்பெற்ற தற்காத் தனக்கிங் குறுபெயராம்
உத்தமச் சோழனென் றன்பாத் தரப்பெறு மோங்குபட்ட
வர்த்தனன் வாழ்வுறு மாணூர் திகழ்கொங்கு மண்டலமே.

     (க-ரை) இவ்வுலகத்திற் சேனாபதியாக இருந்து சென்ற போர்களில்
வெற்றிபெற்று வருவதைக் கண்ட உத்தமச் சோழன் என்னும் அரசன், தன்
பெயரான உத்தமச் சோழன் என்னும் பெயரைப் பட்டப் பெயராகக்
கொடுக்கப்பெற்று (சர்க்கரை) வாழும் ஆணூர் கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு :- தாராபுரந் தாலூகா காங்கேயம் டிவிஷனில் (நத்தக்)
காரையூர் என்னும் ஊருக்கும் ஆணூருக்குந் தலைமை பெற்றவர்கள்
சர்க்கரை என்னும் பெயர்க்குடியினர். அம்மரபினரில் ஒருவர் உத்தமச்
சோழ சக்கிரவர்த்தி இடத்துச் சேனாதிபதிப் பதவி பெற்றனர். சேனையை
நடத்தி வெற்றிபெற்று வந்தனர். மகிழ்வுற்ற வேந்தன் உத்தமச் சோழன்
என்று தன் பெயரை விருதுப் பெயராகக் கொடுத்தான்; என்பதற்கு அடியிற்
குறித்தவைகள் சான்றாக விளங்குகின்றன.

                         (மேற்)

ஓங்கு சொட்டைக் காரர்கண்ட னுத்தமக்கா மிண்ட
                                    னென்ற
ஈங்குலகி லுன்னையல்லா வெவர்க்காகிலும் வருமோ

(நல் காதல்)

     நத்தக்காரையூர் சயங்கொண்டநாத ஈசுரர் ஆலயத்து உள் தூணில்
உத்தமச் சோழக்காமிண்டன் நட்டதூண் என வெட்டப்பட்டுளது.