பிரிவு தோன்றாது
இறுகஅணைந்து வீற்றிருத்தலைக்கண்ட பிருங்கி
முனி வண்டு வடிவு கொண்டு பறந்து கழுத்துச் சந்தின் வழிபுகுந்து
சாமியை மாத்திரம் வலஞ் செய்தனன். தேவியார் சினந்து என்னை
அவமதித்தனை யாதலின் என் கூறு ஆன பொருளையும் நீக்கிவிடு,
எனவே பிருங்கி உடலிலுள்ள ஊன்முதலியன கழன்று நழுவி விட்டன.
வலுவற்ற முனி விழச்சாயவே, எம்பெருமான் மற்றொருகால் தோன்றச்
செய்தனர். கிரணமின்றிச் சூரியனில்லை, சூடின்றி நெருப்பில்லை
ஆதலின் சக்தியின்றிச் சத்தன் (சிவமில்லை) என்ற உண்மை காணாது
மயங்கினையெனப் பெருமான் தேற்றினர். பிருங்கி மகிழ்ந்து பார்வதி
பரமேசுரரை வணங்கிச் சென்றனன். சிவம் வேற நாம் வேறாக
இருத்தலினாலன்றோ ஒரு முனிவன் நம்மை இகழ நேர்ந்தது என்ற
கருத்தினால் தேவியார் கேதாரம், காசி, காஞ்சி, திருவண்ணாமலை முதலிய
தலங்களில் தவம்புரிந்து திருச்செங்கோட்டில் எழுந்தருளிக் கேதாரவிரத
மியற்றிச் சிவபரஞ்சுடரின் இடதுபாகம் பெற்று ஸ்ரீஅர்த்தநாரீசுரர்
எனவிளங்குகின்றனர் (இது கீழ்க்கரைப் பூந்துறைநாடு சேலம் ஜில்லா)
(மேற்)
பணிமலையி லெழுந்தருளிப்
பரைக்கொருபா கங்கொடுத்த
பரிசின் றோற்றம்
அணிமணித்தண் டுச்சியின்மூன் றங்குலியை வளைத்தமைத்த
வனப்புக் கொப்பா
மணிவரைமா துமையிடத்து வைத்தணைத்து மகரகுழை
வலத்தேநாலத்
தணிவிலொளி தயங்கியதண் டரளமணித் தோடிருபா லாகித்
தானே.
(திருச்சேங்கோட்டுப்
புராணம்)
|
வெந்தவெண்
ணீறணிந்து விரிநூறிகழ் மார்பினல்ல
பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச்செங் குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவா ரவல மறுப்பாரே.
(திருஞான
- தேவாரம்)
|
வானிகூடல்
திருநண்ணாவூர்
14.
|
காலி
லரவ மிருசுட ரைப்பற்றுங் காலத்திலே
மேலுல கம்பெறு வோர்புனல் மூழ்க விரும்ப துவுங்
கோல மிகுந்தப வானீயும் பொன்னியுங் கூடுதுறை
வாலிப காசிநண் ணாவூர் பயில்கொங்கு மண்டலமே. |
|