125

     (க-ரை) தமிழிலக்கியங் கற்றவர்கள் எளிதிற் பாடஞ் செய்யவும்,
தெரிந்து கொள்ளவும் உதவியாகும்படி உரிச்சொல் நிகண்டு என
வெண்பாவாற் செய்துதவிய காங்கேயன் என்பவன் வாழும் மோரூருங்
கொங்கு மண்டலமும் என்பதாம்.
 

பலதலை தேர் காங்கேயன் பட்ட முடையான்
உலகறியச் சொன்ன வுரிச்சொல் - (உரிச்சொல் நிகண்டு)

முந்து காங்கேய னுரிச்சொல் -      (ஆசிரிய நிகண்டு)

பெருத்த நூல்பலவுஞ் சுருக்கித் தமிழில்
உரிச்சொல் நிகண்டென உரைத்த காங்கேயன்

(பாம்பண கவுண்டன் குறவஞ்சி)

     காங்கேயனென்பது பட்டப்பெயர். இவன் இன்ன பெயரை உடைய
காங்கேயனென்று விளங்கவில்லை.

     கங்கைக் குலத்தவரான வேளாண்டலைவருக்குக் காங்கேயன்
என்றபட்டப் பெயரிட்டு அரசர் அழைத்திருக்கின்றனர் போலும்.
புதுவைக் காங்கேயன் ஆட்கொண்ட காங்கேயன் எனும் பெயர்கள்
வழங்கி வந்திருக்கின்றன.

     வேறொருவர் இவ்வுரிச்சொல் நிகண்டு செய்தனர் எனச் சொல்வாரு
முளர்.

     இச்சதகத்துள் 54, 64, இவ்வெண்களுள்ள செய்யுட்கள் இம்மோரூர்க்
காங்கேயர்களைக் குறித்தன. இவர்களுக்கு இம்முடி என்று பட்டப்
பெயரிருக்கிறது.

                        மருத்துவி

92.



குறைவறு தெண்ணீர் நதியணை காந்த புரத்தொருநல்
லிறைமக ளார்மக வீனப் பொறாதுட லேங்கவகிர்
துறைவழி யேற்று மகிழ்வூட்டு மங்கலை தோன்றிவளர்
மறைவழி தேர்நறை யூர்நாடு சூழ்கொங்கு மண்டலமே.

     (க-ரை) நிறைந்த வெள்ளமுற்ற ஆற்றினை அடுத்த காந்தபுரத்தை
ஆளும் வேந்தன், பெண் கருப்ப வேதனையுற்றுக் கருவு