13

     (க-ரை) பொன்னுலகத்தைப் பெற விரும்புகின்ற சீலர்கள், சூரிய
சந்திர கிரகண காலங்களில் பவாநி நதி காவேரியுடன் கலக்குகிறதான
கூடுதுறையில் முழுகுகிறார்கள். அந்த வாலிப காசியான திருநண்ணாவூர்
உள்ளது கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- பவானிகூடல் திரிவேணி சங்கமமாகும். காவேரி நதியே
கங்கைநதி, பவானிநதியே யமுனை, பராசர முனிவரால் உண்டாக்கிய
ஆலயத்திலிருந்து வரும் அமுதநதியே காசிக்ஷேத்திரத்திலுள்ள பவாநி.
ஆதலால் இம்மூன்று நதிகள் கூடலே திரிவேணி சங்கம மாயிற்று. (இது
வடகரை நாடு)

                      (மேற்)

பொன்னியே கங்கை யமுனையே பவானி பொருவரும்
                                பாராசரன் வகுத்த
மின்னவி ரமுத நதியதே வானி யல்லது வேறல விந்தத்
தன்னிகர் பிறிதில் தலந்திரி வேணி சங்கம மாதலாற்                                        றென்பாற்
கன்னிமா மதில்சூழ் காசியின் மேலாய்க் கவினுமிக்                                     கடிநகரன்றே

(பவானித் தலபுராணம்)

                   திருமுருகன் பூண்டி

15.




கனத்த வடிக்கொண் முலையாள் பரவைதன் காதலினாற்
சொனத்தி லடிக்கொளும் பேராசைச் சுந்தரர் சொற்                                      றமிழ்க்கா
அனத்தி னடையுடை யாள்பாகன் றென்முரு காபுரிசூழ்
வனத்தி லடித்துப் பறித்தது வுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) பரவை யாரின் காதலாற் பொருளாசை கொண்ட
சுந்தரமூர்த்தி நாயனாரிடத்திற் பதிகங் கேட்க விரும்பிய திரு மூருகன்
பூண்டி எம்பெருமான், நாயனாரின் திருக்கூட்டத்தார்கள் சுமந்து கொண்டு
போகும் பொன் முடிப்புகளைப் பறித்துக்கொண்டதும் கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு :- கொடுங் கோளூருக்குச் சென்று சேரமான் பெருமாள்
நாயனரால் கொடுக்கப்பெற்ற நிதிக்குவைகளைச் சுமந்து கொண்டு
அடியார்கள் முன்னடக்க, வன்றொண்டர் திருமுருகன் பூண்டிக்கு
அருகுவந்தனர். முருகாவுடையார் சிவகணங்களை வேடர் வடிவாகச்
சென்று வழிப்பறி செய்து வருமாறு