130

காவேரியின் உபநதியான பவானியாற்றிற் சேரும் இடத்துக்குச்
சமீபமான தணாக்கன் கோட்டை என்னுஞ் சிறந்த ஊர்தான், அப்பவானி
நதிக்கரையில் நஞ்சை நிலங்களாற் சூழப்பெற்று (லாசன் அபிப்பிராயப்
படிக்கு) கஜார அட்டிக்கணவாயை அடுத்திருக்கிறது. இதுமுன் ஒரு காலத்து
சங்ககிரித்துர்க்கம் குன்றத்தூர் கூற்றம் - தாராபுரக் கூற்றம் என்பன போலத்
தணாக்கன்பேட்டைக் கூற்றம் என்றிருந்திருக்கிறது. இக்கூற்றத்தைச் சூழ்ந்த
நாடுகள் ஏழு. இதை அடுத்துள்ள பவானி அணை உடைந்துபோன பின்பு
நஞ்சை நிலங்கள் பாழ்த்து வனமாயிருக்கலாம். கற்றாழை முதலியவற்றால்
மூடப்பெற்று யானை முதலிய கொடிய விலங்கினங்கள் நடமாடும்
வனமானாலும் கோவில்கள் இருக்கின்றன. தென்னை மரங்களும் நிற்கின்றன.
25 - வருஷங்களின் முன் சிகாரிகளின் துணை கொண்டு சென்று 3 - நாள்
கோயிலினுளிருந்து அங்குள்ள பவானி ஈசுரருக்கு, அஷ்டபந்தன
கும்பாபிஷேகம் செய்தோமென்று திருச்செங்கோட்டுக் குருக்கள் ஒருவர்
கூறுகிறார். இப்பொழுது கோபி செட்டிபாளயத்துள்ள தாலூக்கா கச்சேரி
இதன் முன் சத்திய மங்கலத்தும், அதன் முன் தணாக்கன் கோட்டையிலு
மிருந்ததாம்.

     கொங்கு மன்னர்கள் 9 ஆம் நூற்றாண்டிலும்
ஆண்டார்களென்றும் அப்பால் சோழர்கள் வெற்றிகொண்டு நாட்டைக்
கைக்கொண்டார்களென்றும் ஆராய்ச்சியாளர் கருதுகிறார்கள். 100 - வது
செய்யுளை இணைத்து நோக்குக.

                   செய்யான் பல்லவராயன்

93.



தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்த ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் சூளசீர்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப்படை செலுத்த
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே.

     (க-ரை) போஜள வீர புஜபலனென்னும் அரசனது சேனையைச்
செலுத்தி, அவனது பகைவனை வென்றபடியால் "பல்லவராயன்" என்று
பட்டங் கொடுக்கப்பெற்ற வேட்டுவச் செய்யானுங் கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு :- மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அறைச்
சலூரில் கரைய வேட்டுவரில் செய்யான் என்பவன் ஓய்சல வீரவல்லாள
வேந்தனிடத்தில் சேனா வீரனாக இருந்தான். அவனது யுத்த தந்திரத்தை
நன்கு மதித்து அந்த அரசன் பல்லவராயன் என்று பட்டப்பெயர்
கொடுத்தான். தன்பெயருடன் செய்யான்