131

பல்லவராயன் என்று புகழுடன் வாழ்ந்தான். இவன்மீது சில பிரபந்தங்களும்
இருக்கின்றன. இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங் கொண்ட நாயனார்
ஆலயத்தின் தென்புறச் சுவரில் இருக்கிறது .......... ஸ்வஸ்திஸ்ரீ போஜளவீர
புஜ் பல * வீரவல்லால தேவர் பிரதிவி ராஜ்ஜிய பரிபாலனம் .......
மேல்கரைப் பூந்துறை நாட்டு அறச்சலூர் கரையவேட்டுவரில் செய்யான்
பல்லவராயனே இவ்வூரில் உடையார் புற்றிடங் கொண்ட நாயனார்
கோயிலில் திருக்கட்டளையில் திருநிலைக் காலும் செய்வித்தேன் ..... இச்
சாசனமிருக்கிறது.

                    வேணாவுடையான்

94.



கொற்றையில் வீற்றரு ளப்பர மேயர் கொடிஞ்சி செலப்
பெற்றதன் பிள்ளையை வெட்டிவிட் டானற் பெருமையுற
உற்றுள ராயர்பொற் சிம்மா தனத்தி லுவந்து வைத்த
மற்றெறி நீள்புய வேணாடன் வாழ்கொங்கு மண்டலமே.

     (க-ரை) கொற்றவனூரில் எழுந்தருளிய அப்பிரமேய ஈசுரர் தேர்
ஓடும்படி தன் பிள்ளையை வெட்டிப் பலி கொடுக்கக் கண்டராயர். இந்தத்
தீரச் செயலுக்கு வியந்து சிம்மாதனத்து வைக்கப் பெற்ற வேணாடன்
வாழ்வது கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு:- தென்கரை நாடு தாராபுரத்தை அடுத்த கொற்றனூரில்
வீற்றிருந்தருளும் அப்பரமேயர். எழுந்தருளியுள்ள தேர் நிலை விட்டுப்
பெயரவில்லை. இரதம் நிலைக்குவந்து சேர்ந்த பின்பு புசிப்பதுஎன்ற
கொள்கையுள்ள பெரியோர்கள் பலர் வருந்தினார்கள். எத்தனை ஆட்கள்
இழுக்கினும் வடம் அறுந்து போவதன்றித் தேர் நகர்வதில்லை, இது கண்டு
அங்குள்ளார்களெல்லாம் வருந்தினார்கள். அப்பொழுது அங்கு வந்துள்ள
ஒரு சிறுமி ஆவேசமுற்று ஏன் மயங்குகிறீர்கள். இது ஒரு பூதத்தின்
செய்கை. ஒரு மகனான தலைப்பிள்ளையை வெட்டிப் பலி கொடுத்தால்
தேர் நிலை பெயரும் என்று சொன்னாள். அந்நாட்டுத் தலைமை பெற்ற
பெரிய குலத்தானான வேணாடன் என்பான் இதனைக்கேட்டு பல
மெய்யன்பர்கள் வருந்தந்தீர ஒரு பிள்ளையைப் பலியிடுதல் ஒரு


     * சகம் 1245, 1249 ல் எழுதிய ஒய்சல அரசனான வீரவல்லால
தேவனது சாசனங்கள் விஜயமங்கலத்திலிருக்கின்றன (No. 552, 598, 1905)
இந்த அறச்சலூர் என்பது ஈரோடு காங்கேயம் ரோட்டில் 11 வது
மயிலிலிருக்கிறது.