132

பெரிய காரியமோ எனத் திடங்கொண்டு, தலைப்பிள்ளையான தன்
குழந்தையைப் பிடித்து வெட்டித் தேர்காலிற் பலிகொடுத்தான். உடனே
தேர்நடந்தது பத்தர்கள் களி கூர்ந்தார்கள். இதனைத் தெரிந்த விஜய
நகரராயர் இவ்வரிய வீரச்செயலை மெச்சிப் பல மேன்மைகள் செய்தான்
என்ப.

                       வெண்பா

                        (மேற்)

நாத னிரதம் நடவாது செய்கொடிய
பூத மகலப் புதல்வனைவி - நோதமுற
வெட்டிப் புகழ் படைத்தான் வேணுடையான் கொற்றையான்
எட்டுத் திசைமகிழ வே.

                   அடியார்க்கு நல்லார்

95.



குருவை யுணர்ந்த விளங்கோ வடிகளுட் கொண்டு சொன்ன
தருவை நிகருஞ் சிலப்பதி காரத் தனித்தமிழுக்
கருமை யுரைசெ யடியார்க்கு நல்லா ரவதரித்து
வருமைப் பொழினிரம் பைப்பதி யுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) சற்குரு (தீர்த்தங்கரர்) நிலையை நன்குணர்ந்து துறந்த
இளங்கோவடிகள் (சாத்தனராற்) கேள்வியுற்ற கதையைக் கருத்திற்கொண்டு
விரும்பிக் கேட்டவற்றைத் தரும் தருவைப்போல எல்லாப் பொருளையும்
தன்னுளடக்கியுள்ள சிலப்பதிகாரம் என்னும் ஒப்பற்ற முத்தமிழ் நூலுக்கு
அருமையான உரை கண்டருளிய அடியார்க்கு நல்லார் அவதரித்து வந்த
நிரம்பை யென்னும் நகரமுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு :- தமிழ்ப்பெருங் காப்பியங்களைந்தினுள் இரண்டாவதான
சிலப்பதிகாரம் என்னும் சிறந்த நூலுக்கு உரை எழுதியவர் அடியார்க்கு
நல்லார் என்பவராவர். இவர் அந்நூலுக்கு உரையெழுதி யிலரேல்
அக்காப்பியத்தின் அரியபொருள் கண்டு பிற்காலத்தார் எழுத மாட்டார்கள்.
இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல்களுள் ஐயந்திரிபற
ஆராய்ச்சி செய்தவர். ஒவ்வொரு இடத்தும் எடுத்துக்காட்டும் மேற்கோள்
செய்யுள் இந்த நூலிலுள்ளது என்று விளக்கிக் காட்டும் சிறந்த
இயல்புள்ளவர்.

     இவர் கொங்கு மண்டலத்திலே நிரம்பை யென்னும் நகரில்
உதித்தவரென்றும், பொப்பண காங்கேயனென்னும் கொடையாளி