யின் ஆதரிப்பில்
வாழ்ந்தவரென்றும் சிலப்பதிகார உரைச் சிறப்புப்
பாயிரச் செய்யுட்களால் விளங்குகிறது. நிரம்பையென்பது குறுப்பி நாட்டு
ஊர்த்தொகைச் செய்யுளில் காணப்படுகின்றது. அவ்வூர்
விஜயமங்கலத்துக்கணித்தாக இருந்திருத்தல் வேண்டும்.
(மேற்)
ஓருந்
தமிழொரு மூன்று முலகின் புறவகுத்துச்
சேரன் தெரித்த சிலப்பதி காரத்திற் சேர்ந்தபொரு
ளாருந் தெரிய விரித்துரைத் தானடியார்க்கு நல்லான்
காருந் தருவு மனையா னிரம்பையர் காவலனே.
காற்றைப்
பிடித்துக் கடத்தி லடைத்துக் கடியபெருங்
காற்றைக் குரம்பைசெய் வார்செய்கை போலுமக்காலமெனுங்
கூற்றைத் தவிர்த்தருள் பொப்பண காங்கெயர் கோனளித்த
சோற்றுப் பெருக்கல்ல வோதமிழ் மூன்றுரை சொல்வித்ததே.
|
காங்கேயர்
என்ற பட்டப் பெயர் கொண்டுவாழும் பரம்பரையார்
இன்னும் இம்மண்டலத்திருக்கிறார்கள். காங்கேய பட்டமுற்றவர்கள்
செய்வித்த கோயில் குளங்களும், நூல்களுமிருக்கின்றன.
வாணராயன்
96.
|
தொங்கவைத்
துள்ள பனையேட்டில் வாயிற் சொலாதெழூதி
யங்குவைத் தாலதிற் கண்டதை யன்பி னரிதினல்கி
யிங்குமற் றும்வரு வீர்புல வீரென் றிசைபவள
வங்கிசத் தார்வாண ராயனும் வாழ்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும்
தொங்கவிட்டு, வேண்டிவற்றை வாயாற் சொல்லாமல் எழுதிவிட அதிற்
குறித்தவற்றை வந்த புலவருக்கு உதவி, மறுபடியும் வர வேண்டுமென்று
உபசரிக்கும் பவள குலத்தவனான வாணராயனுங் கொங்கு மண்டலம்
என்பதாம்.
வரலாறு
:- கொங்கு வேளாளரில் பவள கூட்டத்தில் வாணராயன்
என்னுஞ் சிறப்புப் பெயர் பெற்று மிகுந்த தமிழ் அபிமானங் கொண்டவனாய்
படித்தவர்களை நன்கு போற்றி அவர்கள் நல்லும் தேசங்களைப் பாராட்டி
இல்லையென்னாது கொடுத்து உபசரிக்குப கடப்பாடு உடையவனாக
ஒருவனிருந்தான்.
மன்னவராகப்
பிறந்தார் கல்வி, யறிவு கைவரப் பெற்றவரேல்
விண்ணவரே போல்வர் என்பது, புலவர் என்னும் பெயர்
|