தாலுகாவைச் சார்ந்தது
இந்த ஜமீன் (பாளையப்பட்டு) இப்போதுள்ள
ஜமீன்தாரர் பெயர் வேங்கட சுப்பு ராமசாமி வணங்காமுடி வாணராயர்
என்பதாம். வளர்கடாயைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான் எனப்
பெருமையுற்றார் ஒருவர். இம் மண்டலத்துளர் என்பதை இந்நூல் 71-ம்
செய்யுளுரையில் காணலாம்.
மேற்
வாயிலிற்
றொங்கு மேட்டில் வரைந்ததைப் புலவர்க் கென்றும்
ஓய்விலா துதவு கீர்த்தி யோங்க வாழ் பவளன் வாண
ராயனெந் நாளும் போற்ற நலமருள் சித்தாண்டீசர்
வாயிலைக் காக்குங் கட்டியக்காரன் வருகின்றானே.
(சித்தாண்டீசர்
- மோகினி விலாசம்)
|
முட்டை
என்ற முருகவேளும்
பொய்யா
மொழிப்புலவரும்
97.
|
முட்டையென்
பேர்சுரம் போக்கா வொருபா மொழியெனக்கேட்
டிட்ட முறுபொய் யாமொழி பொன்போ லெனவுரைக்கச்
சுட்டழகில்லையீ தென்று விழுந்த துளியென்றுநன்
மட்டவிழ் தார்முரு கோன்சொன்ன துங்கொங்கு மண்டலமே. |
(க-ரை)
முட்டை என்பது என் பெயர். சுரம் போக்காக ஒரு
கவி கூறுவாயாக என்றதில் மகிழ்ந்து, பொய்யா மொழி என்னும்
புலவன் பொன்போலு மென்ற முதலையுடைய வெண்பாக் கூறுதலும்,
இது அழகில்லை என்று குறித்து விழுந்த துளியென்ற ஒரு கவியை
முருகவேள் பாடியது கொங்குமண்டலம் என்பதாம்.
வரலாறு
:- இளமையிற்கல்வி பயிலுகையில் ஆசிரியர் வயலைக்
காக்கும்படி அனுப்பப்பட்டார். வெயிலில் களைத்து அருகிருந்து
காளிகோயிலில் படுத்து உறங்கிவிட்டார். ஒரு குதிரை பயிர்க் கதிரை
மேய்ந்து விட்டது. உபாத்தியாயர் தண்டிப்பரே எனப் பயந்து காளிகோயிலை
நோக்கிக் கதறினர். இளையோன் வேண்டுதலுக்கு இரங்கிய காளி
யநுக்கிரகித்தனள். கவிபாடுந் திறமையுற்று அக்காளியம்மையை நோக்கி,
வாய்த்த
வயிரபுர மாகாளி யம்மையே
ஆய்த்த வருகா ரணிவயலிற் - காய்ந்த
கதிரைமா ளத்தின்னுங் காளிங்க னேறுங்
குதிரைமா ளக்கொண்டு போ. |
|