137

     இந்நிகழ்ச்சி திருமுருகன் பூண்டித் தலத்தருகில் நடந்ததென்று
கர்ணபரம்பரையாகப் பெரியோர் கூறுகிறார்கள்.

     குமாரக்கடவுள் அருள்பெற்ற புலவர் காளையார் கோயில் சென்று
பிரசித்த மடைந்து பின்பு புறப்பட்டு தஞ்சைவாணன் மீது கோவைபாடி
மதுரை சென்று சில அற்புதங்கள் நடத்திப் பின் சீனக்கன் என்னும்
உபகாரியின் நட்பினராக இருந்து அவர் உயிர்த் துறக்கவே அவர்
உடலுடன் உடன்கட்டை யேறினர் என்பர்.

             பாரியூர், செட்டி பிள்ளையப்பன்

98.



கலியின் மெலிந்து புகல்கவிக் கீயக் கயிலின்மையால்
புலியி னுழைபுக்குக் கள்வர்கள் பங்குப் பொருட்டிரளை
மலிய வெடுத்துப் புலவனுக் கீந்த வடகரையான்
வலியன் கனவாளன் செட்டிபிள் ளான்கொங்கு மண்டலமே.

     (க-ரை) வறுமையால் தளர்வுகொண்டு கூறிய பாட்டுக்
கேட்டுக் கொடுத்தற்குப் (பொருள்) கையிலில்லாததால் புலிவாழிடத்திற்
புகவே, அவ்விடத்துத் திருடர்கள் பங்கிட்ட பொற்குவியலைப் பெற்றுப்
பெருக்கமாகக் கவிபாடிய புலவனுக்குக் கொடுத்த வடகரை
நாட்டினனான செட்டிபிள்ளான் என்பவனுங் கொங்குமண்டலம் என்பதாம்.

     வரலாறு :- காஞ்சிக்கோயில் நாடு (இப்பொழுது கோபி
செட்டிபாளையம் தாலுக்கா) பாரியூரில் புலவர்களுக்கு இல்லையென்னாது
கொடுப்போனாகக் கொங்கு வேளாளரில் கனவாள கூட்டத்தில் செட்டி
பிள்ளையப்பன் எனப் பேரிய கொடையாளி ஒருவனிருந்தான். அவன்மீது
கவிபாடிக்கொண்டு ஒரு புலவன் வந்தான். கொடுத்திளைத்த தாதாவாக
உள்ள அந்தச் செட்டி பிள்ளையப்பன் என்பவன் மெத்த வருந்திச்
சிந்திக்கிறான். உலகத்தில் ஒருவனிடஞ்சென்று எனக்கு இல்லை, கொடு
என்று கேட்பது சிறுமை, கேட்டோனுக்கு இல்லையென்றசொல்
சிறுமையினும் மிகச் சிறுமை. அதினும் நமக்கும் நம்குலத்துக்குப் புகழை
விளைவிக்கும் கவிபாடிவந்த புலவனுக்கும் வசைதேடிக் கொண்டதாகும்.
ஒருவருக்கு இசையும் வசையும் புலவர் வாய்ச்சொல்லால் நிலை பெறுகிறது.
ஆதலின் இல்லை என்று சொல்வதைவிடச் சமீபத்துள்ள புலித்தூறிற்
புகுந்து அப்புலிக்கு உணவாகச் சாவது புகழை யீட்டும் எனத்துணிந்து
புலிவாழிடத்துட் புகுந்தான்.

     கொள்ளைகொண்ட பொற் குவியல்களை அப் புலிப்புதர் மறைவில்
பங்கிட்டுக் கொண்டிருந்த திருடர்கள் இக்கொடையாளி