138

வருகையை நோக்கிப் பயந்து ஓடலாயினர். கூறுகளாகக்கிடக்கும்
பொற்குவியல்களைக் கண்டு ஒருவாறு மகிழ்ந்து அவற்றை எடுத்து
வந்து கவிபாடியுற்ற புலவனுக்குக் கொடுத்து உபசரித்தனர் என்ப.

     பாரியூர் ஸ்ரீ அமரவிடங்கப் பெருமானார் திருப்பள்ளி எழுச்சிக்கு
நிலதானம் செய்த ஒரு கற்சாசனம் அச்சிவாலயத்திருக்கிறது. அது இது

     ஸ்வஸ்திஸ்ரீ ..................... க்கிரவர்த்தி ........................ தஜவில
வீரவல்லாள தேவர் ......................... ராஜ்ஜியம் பண்ணியருளா நின்ற
...................... வத்ஸரத்து ஆவணிமாத முதல் காஞ்சிக் கூவல் நாட்டிப்
பாரியூர் வெள்ளாளன்களில் செட்டி பிள்ளையப்பனேன் உடையார்
அமரவிடங்கப் பெருமான திருப்பள்ளி எழுச்சிக்கு .....................................

     ஹொ (ஒ)ய்சலர் என்பது போஜளர் என்பதாம். 72 - 93-ம்
செய்யுட்களில் கீழ் நோக்குக.

                     (மேற்)

இட்டமான கவிசொல்லும் பாவலர்க்
     கில்லையென்று சொலற்கஞ்சிக் காட்டில்வாழ்
துட்ட வன்புலித்தூறிற் புகுந்த நற்
     றூயவன் கனவாள குலத்தினன்
செட்டி பிள்ளையப் பன்றினந் தொண்டுசெய்
     தேவிமாமாலை மாதொரு பங்குள
கட்டு செஞ்சடையமர விடங்கனார்
     கதித்துவாழ் பாரியூ ரெங்களூரே.

(அமரவிடங்கர் குறவஞ்சி)

                     கொங்குவேளிர்

99.



நீதப் புகழுத யேந்திரன் காதை நிகழ்த்துதற்குக்
கோதற்ற மங்கையின் மூன்று பிறப்புற்ற கொள்கையன்றி
மேதக்க சொற்சங்கத் தார்வெள்க வேகொங்கு வேளடிமை
மாதைக் கொண்டுத்தரஞ் சொன்னது வுங்கொங்கு மண்டலமே.

     இது உதயணன் கதை என்றும் பெருங்கதையென்றுங் கூறும் கொங்கு
வேண்மாக்கதை அரங்கேற்றிய சரிதம் என்று மாத்திரம்