139

விளங்குகிறது. மற்றை விவரம் நன்கு விளங்காமையால் உரை எழுதவும்
இயலவில்லை.

     வரலாறு :- வச்ச தேச அரசனாகிய உதயணன் சரித்திரத்தைச்
சொற்சுவை பொருட்சுவைகளில் மிகச் சிறந்ததாகக் கொங்கு வேளிரால்
மிக விரித்துக் கூறப்பட்டது. ஒன்பது பகுப்பினை யுடையது. 1-வது
உஞ்சைக் காண்டம் 51 - பகுப்பினையும், 2-வது இலாவாண காண்டம் 20
பகுப்பினையும், மூன்றாவது மகதகாண்டம் 27 பகுப்பினையும், நான்காவது
வத்தவ காண்டம் 17 பகுப்பினையும், 5-வது நரவாண காண்டம் ஒன்பது
பகுப்பினையும் உடையன. ஒவ்வொரு சிற்றுறுப்பும் மிகப்பெரிய ஆசிரியப்பா
வொன்றால் இயற்றப்பட்டுள்ளது. இது கதை யெனவும் பெருங்கதை எனவும்
கொங்குவேள் மாக்கதை எனவும் வழங்கும். சிந்தாமணி முதலிய
காப்பியங்களிலும் இதனை மிக மேலாக மதித்து அடியார்க்கு நல்லார்
சிலப்பதிகார உரையில் மேற்கோளாக எடுத்துக் காட்டியிருக்கிறார்.

                    (மேற்)

தலமுத லூழியற் றானவர் தருக்கறப்
புலமாக ளாளர் புரிநரப் பாயிரம்
வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச்
செலவுமுறை யெல்லாஞ் செல்கையிற் றெரிந்து
மற்றை யாழுங் கற்றுமுறை பிழையான்
பண்ணுந் திறனுந் திண்ணிதிற் சிவணி
வகைநயக் காணத்து தகைநய நவின்று
நாரத கீதக் கேள்வி நுனித்து
பரந்தவந் நூற்கும் விருந்தின னன்றித்
தண்கோ சம்பி தன்னக ராதலிற்
கண்போற் காதலர்க் காணிய வருவோன்
கார்வழி முழக்கி நீர்நசைக் கெழுந்த
யானைப் பேரினத் திடைப்பட் டயலதோர்
கான வேங்கைக் கவர்சினை யேறி
யச்சமெய்தி யெத்திசை மருங்கினு, நோக்கினன்"

(உதயணன் கதை வத்தவ காண்டம் யாழ்பெற்றது.)

                     அவநிதன்

100.



தவநித நோற்கு மறவாணர் மேவத் தழைகுடிகள்
தவநிதி யோங்கத் தரியலர் தாழ நலம் பொருந்தி
அவநித னாதியரசர் வடக்கு மடங்க மணி
மவுலி தரித்துப் புகழ்நீண் டதுகொங்கு மண்டலமே