150

பாரதச் செய்திகள்

     மல்லவரை வீமன் செயித்தது, கீசகனைவதைத்தது, விசயன் ஆயுதம்
அடைக்கலம் வைத்தது, வீமன் மல்லரை ஆலமரத்தில் தொங்கச் செய்தது,
பாண்டவர்கள் மாண்டுயிர் பெற்றது. அறுந்த கனி பொருந்தியது.

அதிசயங்கள் ஐதிகங்கள்:

     பொன்மாரி பொழிந்தது, மாமாங்கச்சுனை, திரிசூலப்பனை, பஞ்ச
தளவில்வம், நட்டாற்றீசுவரர் கோவில் வாயிற்படியினுள் காவிரி நீர் புகுந்தது,
சுட்டதலை வெடியாதது, சமைத்த மீன் துள்ளி விளையாடியது, சோழனை
யானைகொண்டு போனது முதலியன.

வேளாள குலத் தலைவர்கள்

     வெண்ணைநல்லூர்ச் சடையன், சர்க்கரை மன்றாடியார்,
நண்ணாவுடையார், உலகுடையார், காங்கேயமன்றாடியார், பல்லவராயர்,
வேணாவுடையார், ஒதாளன் ஆண்டபெருமான் தொண்டைமான் முதலியார்.

தமிழ்க் கீர்த்திகள்

     கம்பருக்கு அடிமையானது, பல்லக்குச் சுமந்தது, தண்டிகை
தாங்கிக் காளாஞ்சியேந்தியது, சூலிமுதுகிலன்னம்படைத்தது, புலவன்,
தாய் முதுகிலேறப் பொறுத்தது; பாம்பின் வாயிற்கையிட்டது.
கம்பநாடர்களாயிரவருக்கன்னமிட்டது. சங்கப்புலவர்களையாதரித்தது,
வேளாளவைசியர் பசும்பையெழுபது பெற்றது முதலியன.

புலவர் செய்தி

     கொங்குவேள் அடிமைப் பெண்ணைக்கொண்டுத்தரம் சொல்வித்தது.
வாலசுப்பப்புலவன் தோயக்குலத்தானை வென்றது.

சங்கம்

     விசயமங்கலத்தமிழ்ச் சங்கம், காடையூர்ச் சங்கம் முதலியன.

     இந்நூலிலிருந்து காட்டப்பெறாத செய்திகள் பல. அவற்றை நூல்
நோக்கியறிந்து கொள்க. கம்பரும் கொங்குநாடும்