16

                  (மேற்)

கோமுக முனியும்பட்டி முனிவனுங் குறுகியேத்த
வேமுறு பூதநாத ரிடனறத் துவன்றிப் போற்றக்
காமுறு விசும்பிற் றேவர் கடிமலர் மாரிதூர்ப்பத்
தீமுழங் கங்கைவள்ள றிருநட நவிற்றலோடும்

(பேரூர்ப்புராணம்)


பாரூருமரவல்கு லுமைநங்கை யவள்பங்கன் பைங்கணேற்ற
னூரூரன்றருமனார் தமர்செக்கி லிடும்போது தடுத்தாட் கொள்வான்
ஆரூரன்றம்பிரா னாரூரன் மீகொங்கி லணிகாஞ்சி வாய்ப்
பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றாமன்றே

(சுந்தரமூர்த்தி நாயனார் புராணம்)

            பட்டிப்பெருமான் பள்ளனானது

18.



கடுவாள் விழியிணை யாரூர்ப் பரவை கலவிவலைப்
படுவார் தமிழ்ச்சுந் தரர்பாடற் கீயப் பரிசின்மையால்
நெடுவாளை பாயும் வயலூடு போகி நெடியபள்ள
வடிவாகி நின்றதும் பேரூர்ச் சிவன்கொங்கு மண்டலமே.

     (க-ரை) சுந்தரர் பாடிவருவார், கொடுக்கப் பொன்னிலையே என்று
ஒளித்தார் போலப் பட்டிப்பெருமானார் பள்ளவடிவு கொண்ட பேரூருங்
கொங்கு மண்டலம் என்பதாம்.

                       (மேற்)

உயர்ந்தவுந்தாமே யிழிந்தவுந்தாமே யெனமறை                         யோலமிட்டுரைக்கும்
வியந்ததஞ் செய்கை யிரண்டினுளொன்று வேதியனாகி
                             முன்காட்டிப்
பயந்தரு மிறைவர் மற்றதுங்காட்டப் பள்ளனாய்த்
                          திருவிளை யாட்டால்
நயந்தபூம் பணையின் வினைசெய வன்பர் நண்ணி
                            முனண்ணினரம்மா.

                                   (பேரூர்ப்புராணம்)

             நந்திக்கு மறுமுகம் வளர்ந்தது

19.



நறைவயல் வாய்ச்சுந் தரர்க்கொளித் தாரதை நந்தி சொலப்
பிறைமுடி வேணியர் பட்டீச் சுரர்பெரு மண்வெட்டியாற்
குறைபட வெட்டி விழுமுக நந்திசெல் கொள்கையினால்
மறுமுக மீண்டு வளர்ந்தது வுங்கொங்கு மண்டலமே.