|  
                    விசயன் 
        ஆயுதம் அடைக்கலம்  
                        வைத்தது 
        - விசயமங்கலம்  
      
         
          |  
             7. 
               
               
               
               
               
           | 
          துளைமணி 
            ரத்ன மகுடா சலத்தைவர் சூதில்நொந்தே  
            கிளையினை நீங்கி வனவாசம் செய்கையில் கீர்த்திபெற்ற  
            விளைவயல் சூழ்மங்கைப் பத்தினிக் கோட்டத்தில் வில்விசயன் 
             
            வளைவில் அடைக்கலம் வைத்தது வும்கொங்குமண்டலமே. | 
         
       
	       (கு 
        - ரை) மகுடாசலத்தைவர் - மகுடங்களைத் தரித்த பாண்டவர்  
        ஐவர். சகுனியின் வஞ்சனையால் சூதில் தோற்ற பாண்டவர் வனவாசம்  
        செய்கையில் கொங்கு நாட்டுப் பகுதியில் பல இடங்களில் தங்கியதாகச்  
        செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. அதனால் பலவற்றைப் பாண்டவரோடு  
        தொடர்புபடுத்திப் பேசிவருகின்றனர். இதிகாச மாந்தரோடு தொடர்பு  
        படுத்தினால் பெருமையுண்டாகும் என்று நம்பினர். ஐவர்மலை (பா - 31),  
        மல்லரை வீமன் செயித்தது (பா - 32) கீசகன் கதை (33) வீமன் மல்லரைத்  
        தொங்கச் செய்தது (34) அறுந்த கனி பொருந்தினது (35) நச்சுப்பொய்கை 
        (39) முதலியன அவ்வகையில் பாரதச் செய்திகளோடு தொடர்பு உடையன.  
        வனவாசத்தின் போது அருச்சுனன் விசயமங்கலம் விசயமங்கை கோயிலில்  
        தன் வில்லை அடைக்கலமாக வைத்தான்.  
                     சேரமான் 
        கயிலை சென்றது  
      
         
          |  
             8. 
               
               
               
               
                
           | 
          கலைக்கிட 
            மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்  
            கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்  
            தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கையிலை  
            மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே | 
         
       
           (கு 
        - ரை) 
        கலைகளுக்கு இருப்பிடமான தமிழ்ப் பாடல்களைப்  
        பாடுவதில் வல்லவர் சுந்தர மூர்த்தி நாயனார். சுந்தரரின் தோழர்  
        சேரமான் பெருமாள் நாயனார். சுந்தரர் வெள்ளை யானையின் மீது  
        கயிலைக்குச் சென்றார். தோழர் சேரமான் பெருமாள் நாயனார் இதனை  
        அறிந்து வெள்ளைக் குதிரையின் மீது ஏறி   
       |