(23)
|
முழங்குங்
கடலுல கத்தாசை நீத்தமுக் கண்ணரசைத்
தொழுங்கை யுடைய தவப்பெரி யோர்களுந் தொல்லைமனத்
தழுங்குங் துயரகற் றும்பிற வாநெறி யாமிதென
வழங்குங் தலந்திருப் பேரூர் பயில்கொங்கு மண்டலமே. |
சுட்டதலை
வெடியாதது - பேரூர்
(24)
|
அண்டர்
பணிகின்ற தெய்வீக மேலைச் சிதம்பரத்திற்
புண்ட ரிகப்பதத் தாடும்பட் டீசர் புகழருளாற்
றுண்ட வுடலுயிர் மாண்டாரைக் கானலிற் சுட்டதலை
மண்டை வெடித்திட் டிடாப்பேரை சூழ்கொங்கு மண்டலமே. |
அறுபத்துமூவர்
- பேரூர்
(25)
|
பிறவா
நெறியுநற் பேரூர்ப் பதியும் பிறப்பையொழித்
திறவா திருக்க மருந்துண்டு காண்பட்டி யார்பச்சையைத்
திருவா திரையிற் கனக சபையினிற் சேவித்திட
மருவா தறுபத்து மூவரும் வாழ்கொங்கு மண்டலமே. |
தொண்டாம்புத்தூர்
- அகத்தியர்
(26)
|
அந்தரத்
தோர்களும் பூலோகத் தாரு மதிசயித்துப்
புந்தி மகிழ்ந்து தொழவர மீயப் பொதியம்விட்டுச்
செந்திரு வாழ்கின்ற தொண்டாம்புத் தூரிற் செழுங்கிரிமேல்
வந்து குறுமுனி வைகி யதுங்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) தொண்டாம் புத்தூர். இது தொண்டாமுத்தூர் என
வழங்குகிறது. இது பேரூருக்குத் தென்மேற்கே ஐந்தாவது கல்லில்
உள்ளது. தொண்டாம்புத்தூருக்கு அருகே (சுமார் இரண்டு கல்
தொலைவில் பழுதுபட்ட பழமையான சிவாலயமொன்றுள்ளது.)
|