சர்க்கரை
உத்தமச்சோழனை வென்று மதிற்கரை
காத்தது
(57)
|
நதிக்கொளுங்
கொல்லியி ரசவாத கங்கையி னாகபடம்
ஒதுக்கிய பாசையி லுத்தமக் காமனை யொன்னலரை
அதக்கிய வேல்சொட்டை யாணூர்ப் பவுதையு மன்னக்கொடி
மதுக்கரை சூழ்ந்தனை வோர்களும் வாழ்கொங்கு மண்டலமே. |
சர்க்கரை
விசயனகர்ச் சர்க்கரை யெனப் பெயர்
பெற்றது
(58)
|
விக்கிரமன்
கோட்டை யழித்திடும் கொற்ற விசயநகர்ச்
சர்க்கரை யென்றவன் வந்துதித் தான்றரு காரைநகர்
கைக்கரச் கொட்டையில் வீரர் கதறக் கதறக்குத்தி
வைக்கவுஞ் சர்க்கரை யுத்தமக் கோன்கொங்கு மண்டலமே. |
பங்கயச்
செல்வி - காடையூர்
(59)
|
பாங்குறு
சொக்கர் மதுரைமீ னாட்சிதென் பாண்டியன்றன்
காங்கய மன்றாடி மைந்தனென் றேநற் கடகமுடி
யோங்கிய காடை களுமுட்டி வென்றவ ளுத்தமிதான்
மாங்குயில் பங்கயச் செல்வியும் வாழ்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை)
காங்கேய மன்றாடியர் என்பவர் காங்கேய நாட்டில்
உள்ள காடையூரில் வாழ்ந்தவர். பொருள் தந்த குலத்தினர். இவர்
மலயத்துவசன் எனும் பாண்டிய மன்னவனிடம் படைத்தலைவராய் இருந்து
பல வெற்றிகளைத் தேடித் தந்து பாண்டியனால் அவனுக்கு உரிய கொடி,
குடை, மாலை முதலிய சன்மானங்களைப் பெற்றவர். மற்றும் பாண்டியனிடம்
இம்முடிப்பட்டமும் சங்கப் பலகையும் பெற்றவர். கொங்கு நாட்டில் பல
ஊர்களுக்கு அதிகாரம் பெற்றவர். இவரைப் பற்றிய தனிப்பாடல்கள் பல.
|